வன்னியர் விடுதலை இயக்கத்திற்கு வரவேற்கிறோம்

சங்கத்தின் அங்கமாக வந்துள்ள சிங்கங்களை வன்னியர் விடுதலை இயக்கத்தின் சார்பில் அன்புடன் வர வேற்கின்றேன்.

1.சங்கத்தின் அங்கமான சிங்கங்களை, காடுவெட்டி குரு அவர்களின் உணர்வு பிழம்புகளை, வன்னியர் விடுதலை இயக்கத்தின் சார்பாக பேரன்புடன் வரவேற்கின்றோம்.

2.வன்னியர் விடுதலை இயக்கமானது வன்னிய குல சத்திரிய மக்களின் நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், அரசியல் சம உரிமைக்காகவும், பிளவு பட்ட சமூகத்தை உணர்வு ரீதியாக ஒன்றிணைக்கவும், ஏக்கங்களை போக்கவும், ஏளனங்களை எதிர்க்கவும் உருவாக்கப்பட்டது.

3.இவ்வியக்கத்தில் இணைவதற்கு வன்னியர் என்பதே ஆகச்சிறந்த தகுதி நீவீர் எக்கட்சியாக இருப்பினும் நம் இயக்கத்தின் மனசாட்சி என்பதை மறந்து விடாதீர்.

4.நமது இயக்கத்தின் முக்கியமான நோக்கம் ஈன்றெடுத்த தாய் மீது காட்டும் அன்பு, அக்கறை, பாசம், உணர்வு மற்றும் பாதுகாப்பை வீர வன்னிய குல சத்திரிய மக்கள் மீதும் காட்ட வேண்டும்.

5.ஆழி சூழ் உலகினை ஆண்ட நம் முன்னோர்களின் ஆசியோடு நம் இயக்கத்தை வட்டாரம், ஊராட்சி, மாவட்டம் என அனைத்து பகுதியிலும் ஆல விழுதினைப் போல வேரூன்ற செய்து அதில் நம் மக்களை இளைப்பாற செய்வோம்.

6.அரசியல் அமைப்பின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டும் நமது இயக்கத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டும் பொறுப்பேற்ற பெருமக்கள் “ஆதியும் நானே அந்தமும் நானே” என்பது போல “தலைவனும் தானே தொண்டனும் தானே” என்பதை உணர்ந்து இயக்கத்தை எஃகு கோட்டையாக வலுப்படுத்த வேண்டும்.

7.எங்கு வன்னியர்களுக்கு இடையூறு ஏற்பட்டாலும் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் உறவுகளை உயிராக எண்ணி காக்க வேண்டும். நம்மால் எந்த சமூகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது நமக்கும் பாதிப்பை ஏற்படுத்த விடக்கூடாது. அனைத்து சமூகத்திற்கும் மதிப்பளிப்போம்! நம் சமூகத்திற்காக உயிர் துறப்போம்!!எல்லோரும் இங்கு “வாழட்டும் மூத்த குடியான சத்திரிய வம்சம் ஆளட்டும்” நம் தரப்பில் தர்மம் இருப்பின் வன்னிய விடுதலை இயக்கம் வன்னிய மக்களுக்கு எப்போதும், எங்கேயும் துணைநிற்கும்.

பெருமையுடன்,
MRP. உமாபதி நாயகர்,
நிறுவனர்- தலைவர்,

வன்னியர் விடுதலை இயக்கம்.

நீங்கள் இந்த இயக்கத்தில் இணைய வேண்டுமா?